உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / த.வெ.க., நிர்வாகியின் ஆட்டோவுக்கு தீ வைப்பு

த.வெ.க., நிர்வாகியின் ஆட்டோவுக்கு தீ வைப்பு

புழல்: த.வெ.க., நிர்வாகியின் ஆட்டோவுக்கு தீ வைத்த மர்மநபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். புழல் அடுத்த விநாயகபுரம், நேரு நகரைச் சேர்ந்தவர் சந்துரு, 28; த.வெ.க., நிர்வாகி. இவர், கல்லுாரியில் படித்துக் கொண்டே ஓய்வு நேரத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=x0wcypzy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நேற்று முன்தினம் இரவு ஆட்டோவை வீட்டருகே நிறுத்தி, துாங்க சென்றார். நள்ளிரவு ஆட்டோ தீப்பிடித்து எரிவதாக சந்துருவுக்கு, பகுதிமக்கள் தகவல் அளித்தனர். வீட்டில் உள்ள தண்ணீரை வைத்து தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் ஆட்டோவின் சீட், கவர் உள்ளிட்டவை தீப்பிடித்து எரிந்தன. ஆட்டோவுக்கு மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா என, புழல் போலீசார் விசாரித்து வருகின்றனர்,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை