முதியவரிடம் வழிப்பறி இருவர் கைது
செம்மஞ்சேரிசெம்மஞ்சேரியை சேர்ந்தவர் ராஜு, 60. நேற்று முன்தினம், ஓ.எம்.ஆர்., குமரன் நகரில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்திவிட்டு வெளியேறினார்.அப்போது, இரண்டு பேர் ராஜுவை பின் தொடர்ந்து சென்று, அவர் வைத்திருந்த மொபைல் போன் மற்றும் 1,000 ரூபாயை பறித்து தப்பிச் சென்றனர்.செம்மஞ்சேரி போலீசார், பாரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர். அதில், செம்மஞ்சேரி, சுனாமி நகரை சேர்ந்த அப்பு, 22, சக்திவேல், 23, என தெரிந்தது. நேற்று, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.