வசந்த் அண்டு கோ கண்காட்சி வர்த்தக மையத்தில் இன்று துவக்கம்
சென்னை, தமிழகம், புதுச்சேரி, பெங்களூர் சேர்த்து, 124 கிளைகளுடன் வசந்த் அண்டு கோ மற்றும் உலகத்தர வீட்டு உபயோகப் பொருட்களின் தயாரிப்பாளர்கள் இணைந்து நடத்தும், வீட்டு உபயோகப் பொருட்களின் மாபெரும் கண்காட்சி மற்றும் விற்பனை, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று துவங்கி, 17 ம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கும் கண்காட்சிக்கு அனுமதி இலவசம். இதில், 'ஏசி'க்களுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகையில், 7,000 ரூபாய் வரையும்; குறிப்பிட்ட, 'ஏசி'க்களுக்கு, 5,000 ரூபாய் வரையும் கேஷ் பேக் சலுகை உள்ளது. அனைத்து வீட்டு உபயோக பொருட்களையும், சுலபத்தவைணை முறையில் வாங்கலாம். சிறப்பு சலுகைகளும், பம்பர் பரிசுகளும் வழங்கப்படும் என, வசந்த் அண்டு கோ அறிவித்துள்ளது.