ஜெயலலிதா பிறந்த நாள் விழா வீரர்களுக்கு நலத்திட்ட உதவி
புதுவண்ணாரப்பேட்டை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு, பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி, புதுவண்ணாரப்பேட்டையில் நேற்று நடந்தது.அ.தி.மு.க., வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க.,அமைப்பு செயலரும், முன்னாள் அமைச்சருமான அன்பழகன் பங்கேற்று, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.ஆர்.எஸ்.ராஜேஷ் பேசுகையில், ''தாலிக்கு தங்கம், பிளஸ் 2 படித்த மாணவியருக்கு 25,000 ரூபாய் திட்டம் என, மக்களுக்கு தேவையான திட்டங்களை சரியாக திட்டமிடுவதாக அ.தி.மு.க., அரசு இருந்தது. ஆனால் தி.மு.க., அரசிடம் திட்டமிடல் என்பதே இல்லை,'' என்றார்.அன்பழகன் பேசுகையில், ''அமைச்சர் பொன்முடி, 'ஓசி பஸ், ஓசி பயணம்' என, பெண்களை கிண்டல் அடித்து வருகிறார். ஆனால் விலையில்லா அரிசி, விலையில்லா மிக்சி, விலையில்லா கிரைண்டர் எனக்கூறி, திட்டங்களை வழங்கியது ஜெயலலிதா தான்,'' என்றார்.