உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்

சென்னை, கேரளாவில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில், கரூரில் பெண் ஐ.டி.,ஊழியர் ஏறினார். வேலுார் அருகே காட்பாடி பகுதியை ரயில் கடந்த போது, உடன் பயணித்த இளைஞர் ஒருவர், அந்த பெண்ணிடம் மொபைல்போனை பறித்துள்ளார். அந்த நபரை விரட்டி சென்றபோது, கழிவறைக்குள் அந்த பெண்ணை தள்ளியுள்ளார். இளைஞருடன் இன்னொருவரும் சேர்ந்து, கழிவறைக்குள் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளனர். ரயில், சென்னை சென்ட்ரல் வந்தடைந்தபோது, பாதிக்கப்பட்ட பெண், ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி