உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயில்வேயில் மகளிர் தினம்

ரயில்வேயில் மகளிர் தினம்

சென்னை,சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம், சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையகத்தில் நேற்று நடந்தது. இதில், அமைப்பின் தலைவர் சோனியா சிங் தலைமை வகித்தார்.விழாவின் போது, தெற்கு ரயில்வேயில் கடந்த ஆண்டு மிகச்சிறப்பாக பணியாற்றிய, 26 பெண்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில், சோனியா சிங் பேசுகையில், ''பெண்கள் சமூகத்துக்கு பங்களிப்பவர்கள் மட்டுமல்ல. பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் வளர்ப்பது, வழிநடத்துவது, புதுமைப்படுத்துவது மற்றும் ஊக்கமளிப்பதில், அவர்கள் முதுகெலும்பாக உள்ளனர். தடைகளை உடைத்து சாதித்து வருகின்றனர்,'' என்றார்.விழாவில், அமைப்பின் இணை செயலர் சித்ரா பாலசுந்தர், துணைத் தலைவர் ரேகா கவுசல் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை