மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
05-Sep-2024
புழல், செங்குன்றம் அடுத்த சாமியார்மடம், பாளையத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 35; தினக்கூலி அடிப்படையில் பல்வேறு வேலைகள் செய்து வந்தார்.இந்த நிலையில், கதிர்வேடு பகுதியில் தனியார் கிடங்கு அமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தார். அப்போது, இரும்பு 'டேப்'பால் அளவு எடுக்கும்போது, மின்கம்பியில் டேப் உரசியது. இதில், மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார்.சக தொழிலாளர்கள் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.
05-Sep-2024