மேலும் செய்திகள்
50 வயது ஆணுடன் 18 வயது பெண் ஓட்டம்
14-Feb-2025
அண்ணா நகர், அண்ணா நகர் காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணின் தந்தைக்கு, மோசஸ் என்பவர் மொபைல் போனில் அழைத்துள்ளார். அப்போது, 'உங்கள் மகளை காதலிப்பதாகவும், அவளை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்; இல்லையெனில், அவரது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவேன்' என, மிரட்டி, இணைப்பை துண்டித்துள்ளார்.மேலும், இளம்பெண்ணின் ஆபாச புகைப்படத்தை, உறவினர் பெண் ஒருவருக்கும் அனுப்பி எச்சரித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், இது குறித்து அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.போலீசார் விசாரித்ததில், அமைந்தரையில் உள்ள தனியார் வணிக வளாகத்திற்கு இளம்பெண் சென்றபோது, அங்கு காவலாளியாக பணிபுரிந்த மோசஸ் என்பவருடன் பழகியுள்ளார்.மோசஸ் அப்பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியதால், பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மோசஸ், ஆபாசமாக சித்தரித்த படத்தை, அப்பெண்ணின் தந்தைக்கும், உறவினருக்கும் அனுப்பியது தெரிந்தது.இதையடுத்து, திருநெல்வேலியை சேர்ந்த மோசஸ், 19, என்பவரை போலீசார் கைது செய்து, பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் வழக்கு பதிந்து, சிறையில் அடைத்தனர்.
14-Feb-2025