உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாலிபரை காரில் கடத்தி சரமாரி தாக்குதல்

வாலிபரை காரில் கடத்தி சரமாரி தாக்குதல்

பம்மல், குன்றத்துார் அடுத்த திருமுடிவாக்கம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் சூர்யா என்ற ஈசாக், 29. கடந்த, 2021ம் ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரை கொலை செய்த வழக்கில், முதல் குற்றவாளி என கூறப்படுகிறது. இதனால் அவர், தலைமறைவாக இருந்து வந்தார்.தங்கள் தந்தை செல்வராஜை கொலை செய்த சூர்யாவை பழிக்குப்பழி வாங்குவதற்காக, அவரது மகன்கள் மாரிச்செல்வன், 30, பூபாலன், 29, மற்றும் வெங்கடேசன், 27, ஆகிய மூன்று பேரும், பல நாட்களாக காத்திருந்தனர்.இந்நிலையில், பம்மல் அணுகு சாலையில் சூர்யா நிற்பதாக, மாரிச்செல்வன் உள்ளிட்டோருக்கு, நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.இதையடுத்து, அங்கு சென்ற மாரிச்செல்வன், அவரது சகோதரர் உள்ளிட்ட ஐந்து பேர் கும்பல், சூர்யாவை காரில் கடத்தி, குன்றத்துார் அடுத்த பூந்தண்டலம் நோக்கி சென்றது.வழியில், காரில் வைத்து சூர்யாவின் தலையில் கற்களால் சரமாரியாக தாக்கி, சித்ரவதை செய்துள்ளது.சூர்யா காரில் கடத்தப்படுவதை, அப்பகுதியினர் பார்த்து, சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார், காரின் வாகன பதிவெண் வைத்தும், அதில் பயணித்தோரின் மொபைல் போன் வைத்தும் விசாரித்தனர்.இதையடுத்து, பூந்தண்டலத்திற்கு போலீசார் விரைந்தனர். மாரிச்செல்வன் கும்பலின் தாக்குதலால் படுகாயமடைந்து, பூந்தண்டலத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சூர்யாவை மீட்ட போலீசார், அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.மேலும், மாரிச்செல்வன் உள்ளிட்ட ஐந்து பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி