உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி

மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி

அயனாவரம், ஜார்க்கண்ட் மாநிலம், ஜம்தாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவ மூர்மு, 19. இவர், சென்னை அயனாவரத்தில், புதிதாக கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், கட்டட தொழிலாளியாக பணியாற்றினார்.நேற்று காலை, 7:00 மணியளவில், தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தரையில் கிடந்த மின்சார ஒயரை மிதித்தபோது, மின்சாரம் பாய்ந்து சிவ மூர்மு துாக்கி வீசப்பட்டார்.மயங்கிக் கிடந்த அவரை அங்கிருந்தோர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில், அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து, அயனாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ