பிறந்த நாளுக்கு மாணவியரை அழைத்த வாலிபர் கைது
அசோக் நகர்,:தி.நகர் காவல் மாவட்டத்தைச் சேர்ந்த, அரசு பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவியர், 'இன்ஸ்டாகிராம்' வாயிலாக வாலிபர் ஒருவருடன் பழகியுள்ளனர். வாலிபரின் பிறந்தநாள் வந்த நிலையில், விழாவில் பங்கேற்க கடந்த 29ம் தேதி எண்ணுார் சென்றுள்ளனர்.வீட்டில் கூறாமல் சென்றதால், மாணவியரின் பெற்றோர் பதற்றம் அடைந்து, அசோக்நகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.விசாரணையில், மாணவியர் எண்ணுாரில் இருக்கும் தகவல் தெரிந்து, போலீசார் அங்கு சென்று அழைத்து வந்தனர். பின், அவர்களுக்கு அறிவுரை கூறி, பெற்றோருடன் அனுப்பினர்.இந்நிலையில், மாணவியரை அழைத்து பிறந்த நாள் கொண்டாடியது, மணலியைச் சேர்ந்த மின்வாரிய ஒப்பந்த ஊழியர் தருண், 19, என தெரிந்தது. அவரை 'போக்சோ' வழக்கில் கைது செய்தனர். மாணவியருக்கு பாலியல் தொந்தரவு தராததால், பின்னர் அவரை போலீஸ் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.