உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கல்வி நிலையங்களில் நடக்கும் நிகழ்ச்சிக்கு 10% கேளிக்கை வரி

கல்வி நிலையங்களில் நடக்கும் நிகழ்ச்சிக்கு 10% கேளிக்கை வரி

சென்னை,'கல்வி நிலைய அரங்குகளில் நடக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு, 10 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்கப்படும்' என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு:தமிழக அரசு கேளிக்கை வரி சட்டத்தின்படி, சென்னை மாநகராட்சியில், 2017 முதல் கேளிக்கை வரி வசூலிக்கப்படுகிறது.இதற்கிடையே, கேளிக்கை வரி சட்டம் - 2025ல் திருத்தம் செய்யப்பட்டு, இந்தாண்டு ஏப்., 17 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இந்த சட்டத்தின்படி, கட்டணம், பங்களிப்பு, சந்தா அல்லது ஏதேனும் ஒரு வகையில் கட்டணங்கள் வசூலிக்கும் மண்டபங்கள், பள்ளி, கல்லுாரி மேடைகள், அரங்கங்கள், வளாகங்களில் நடத்தப்படும் கச்சேரிகள், நாடகங்கள், நிகழ்ச்சிகளுக்கு கேளிக்கை வரி விதிக்கப்பட உள்ளது.அதன்படி, சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட கல்வி நிலையங்கள், கல்லுாரி வளாகங்களில் உள்ள அரங்குகளில் அல்லது பிற இடங்களில் நடைபெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு விற்பனை செய்யப்படும் நுழைவு சீட்டில், 10 சதவீதம் கேளிக்கை வரியாக வசூலிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை