உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 10 கிலோ கஞ்சா எழும்பூரில் பறிமுதல்

10 கிலோ கஞ்சா எழும்பூரில் பறிமுதல்

சென்னை,எழும்பூர் ரயில் நிலையத்தில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் இருந்து தாம்பரத்திற்கு செல்ல வேண்டிய சார்மினார் விரைவு ரயில், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு, நேற்று காலை 7:20 மணிக்கு வந்தது.அதில் வந்திறங்கிய வாலிபரின் உடைமைகளை சந்தேகத்தின் அடிப்படையில், ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். இதில் 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் சிக்கின. இதன் மதிப்பு 5 லட்சம் ரூபாய்.விசாரணையில், திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள ஜோகேந்திர நகரைச் சேர்ந்த சாகர்தாஸ், 22, எனவும், விஜயவாடாவில் இருந்து ரயிலில் சென்னைக்கு உலர்ந்த கஞ்சா பொட்டலங்களை எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, சென்னை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம், ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை