2ம் கட்ட மெட்ரோ திட்டம் 10 புது ரயில்கள் வருகை
சென்னை, இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில், இதுவரை 10 புதிய மெட்ரோ ரயில்கள் வந்துள்ளன.இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மூன்று வழித்தடங்களில் மொத்தம், 138 ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில், ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் தயாரிக்கப்பட்டு வருகிறது.இதில், ஓட்டுனர் இல்லாத முதல் மெட்ரோ ரயில், பூந்தமல்லி பணினை மற்றும் போரூர் வரையில் வெற்றிகரமாக, சோதனை ஓட்டம் நடத்தி வருகிறோம். இதுவரை, 10 மெட்ரோ ரயில்கள் வந்துள்ளன.இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் பூந்தமல்லி பைாபஸ் - போரூர் இடையே வரும் டிச., மாதத்துக்குள் மெட்ரோ ரயில் சேவை துவங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.