உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டிவி நிருபர் மீது தாக்குதல் 10 பேர் மீது வழக்குப்பதிவு

டிவி நிருபர் மீது தாக்குதல் 10 பேர் மீது வழக்குப்பதிவு

நீலாங்கரை, நவ. 9- இ.சி.ஆரில் நடந்த விபத்து சம்பவத்தில், போலீசார் முன் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அதை படம் பிடித்த தொலைக்காட்சி நிருபரை தாக்கியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இ.சி.ஆர்., ஈஞ்சம்பாக்கத்தில், சாலையோரம் நின்ற ஆட்டோ மீது, லோடு வேன் மோதியது. போலீசார் விசாரித்து கொண்டிருந்தபோது, இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதனால், இ.சி.ஆரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த தனியார் தொலைக்காட்சி நிருபர் குமார், 38, என்பவர், கேமராவில் பதிவு செய்து கொண்டிருந்தார். அப்போது, லோடு வேன் ஓட்டுநர் அருண், 30, உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்டோர், கேமராவை தட்டிவிட்டு குமாரை தாக்கினர். பின், அனைவரும் சேர்ந்து, குமாரை குண்டுக்கட்டாக துாக்கி சாலை பள்ளத்தில் வீசினர். இதில், அவருக்கு காயம் ஏற்பட்டது. நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, 10 பேரையும் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ