தாம்பரம் கோர்ட்டுடன் 10 கிராமங்கள் இணைப்பு
தாம்பரம்: தாம்பரம் தாலுகாவில் அடங்கிய 10 கிராமங்கள், ஆலந்துார் நீதிமன்றத்தில் இருந்து, தாம்பரம் நீதிமன்றத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. தாலுகாவில் அடங்கிய மேடவாக்கம், ஜல்லடியன்பேட்டை, பெரும்பாக்கம், கோவிலம்பாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், நன்மங்கலம் ஆகிய ஏழு கிராமங்கள்; மாடம்பாக்கம் உள்வட்டத்தில், கோவிலாஞ்சேரி, மதுரப்பாக்கம், மூலச்சேரி ஆகிய மூன்று கிராமங்களின் வழக்குகள், ஆலந்துார் நீதிமன்றத்தில் நடந்தன. இதை சரிசெய்து, 10 கிராமங்களின் வழக்குகளையும், தாம்பரம் நீதிமன்றத்துடன் இணைக்க வேண்டும் என, வழக்கறிஞர்கள் வலியுறுத்தி வந்தனர். மேற்கண்ட 10 கிராமங்களையும் தாம்பரம் நீதிமன்றத்துடன் இணைத்து, கடந்த 6ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.