உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 4 வார்டுகள் இடைத்தேர்தல் 1.02 லட்சம் வாக்காளர்கள்

4 வார்டுகள் இடைத்தேர்தல் 1.02 லட்சம் வாக்காளர்கள்

சென்னை, சென்னையில் நடைபெற உள்ள, நான்கு வார்டு இடைத்தேர்தலில், 1.02 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்ய உள்ளனர்.சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2022ம் ஆண்டில் நடந்தது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களில் 59, 122, 146, 165 ஆகிய வார்டு கவுன்சிலர்கள் உயிரிழந்தனர். இதனால், அந்த இடம் காலியாக இருக்கிறது.இந்த வார்டுகளுக்கான இடைத்தேர்தல், இம்மாதத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி, இடைத்தேர்தலில் ஓட்டளிக்க உள்ள வாக்காளர்களின் பட்டியலை, மாநகராட்சி கூடுதல் கமிஷனர் ஜெயசந்திர பானுரெட்டி, துணை கமிஷனர் பிரதிவிராஜ் ஆகியோர், ரிப்பன் மாளிகையில் நேற்று வெளியிட்டனர்.அதன்படி, மொத்தம் 98 ஓட்டுச்சாவடி மையங்களில், 50,983 ஆண்கள்; 51,145 பெண்கள்; 32 மூன்றாம் பாலினத்தவர் என, ஒரு லட்சத்து, 2,160 வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்ய உள்ளனர்.இதற்கான இடைத்தேர்தல் தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்பட உள்ளது. இடைத்தேர்தலில் தேர்வு செய்யப்படுவர்கள், 2027 வரை கவுன்சிலராக பணியாற்றுவர் என கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி