உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஒரு நிமிடத்தில் 102 வகை சட்னி மாதவரம் பெண்கள் அசத்தல்

ஒரு நிமிடத்தில் 102 வகை சட்னி மாதவரம் பெண்கள் அசத்தல்

மாதவரம்,தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் மாதவரம் ரேடியன் சுப்ரீமா குடியிருப்போர் நலச்சங்கம் இணைந்து, சமையல் கலைஞர் இனியன் ஏற்பாடில், உலக இட்லி தின கொண்டாட்டத்திற்கு, மாதவரத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.இதில், ஒரு நிமிடத்தில் 102 வகை சட்னி செய்யும் நிகழ்ச்சி நடந்தது. விண்வெளி பயணத்தை முடித்து, சமீபத்தில் பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் உருவத்தில் 50 கிலோவில் இட்லி செய்திருந்தனர். அதை, முன்னாள் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் ஹண்டே, மக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார். தொடர்ந்து, மாதவரம் ரேடியன் சுப்ரீமா குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்த 102 மகளிர், ஒரே நேரத்தில், ஒரு நிமிடத்தில் 102 வகை சட்னியை செய்து காண்பித்தனர். காய்கறி, பழம், பருப்பு வகைகளில் அவர்கள் சட்னி செய்து அசத்தினர்.நிகழ்ச்சியில் ஆச்சி மசாலா நிறுவனர் பத்மசிங் ஐசக், காமராஜரின் பேத்தி கமலிகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை