உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முறைகேடு புகார்களுக்கு ஆளான சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 11 பேர் பிற மாவட்டங்களுக்கு மாற்றம்

முறைகேடு புகார்களுக்கு ஆளான சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 11 பேர் பிற மாவட்டங்களுக்கு மாற்றம்

சென்னை: முறைகேடு புகாரில் சிக்கிய சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 11 பேரை வேறு மாவட்டங்களில், மூன்றாம் நிலை நகரங்களுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பிற மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்படுவது இதுவே முதல் முறை.ஊழல் மற்றும் லஞ்ச லாவண்யங்களில் திளைக்கும் அதிகாரிகளை அடையாளம் காணுமாறு மாநகராட்சி நிர்வாகங்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தி இருந்தார். அதன்படி கவுன்சிலர்களுடன் இணைந்து, சாலை அமைத்தல், கட்டடம் கட்டுவதில் விதிகளை மீறுதல், சீல் வைக்கப்பட்ட வீடுகளை திறப்பது போன்றவற்றில் முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் கண்டறியப்பட்டனர்.அப்படி கிடைத்த பட்டியல் பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்தி உறுதி செய்யப்பட்டது. முடிவில் அதில் இடம் பெற்றிருந்த அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் செய்வதற்கான உத்தரவு கொடுக்கப்பட்டது. இதன்படி சென்னை மாநகராட்சியில் நீண்ட காலமாக இருக்கும் அதிகாரிகள் 11 பேர், திருநெல்வேலி, தென்காசி, கோவை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உதவி பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், மூத்த அதிகாரிகள் இதுபோன்று மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.சென்னை மாநகராட்சி தனித்த சட்டத்தின் கீழ் நிர்வாகம் செய்யப்பட்டதால், இதனால் வரை இங்கு பணியாற்றிய அதிகாரிகள் யாரும் வேறு மாவட்டங்களுக்கு மாறுதல் செய்யப்படவில்லை. 2023ல் கொண்டுவரப்பட்ட திருத்த சட்டத்தின் அடிப்படையில் தற்போது தான் முதல் முறையாக பிற மாவட்டங்களுக்கு அதிகாரிகள் மாறுதல் செய்யப்படுகின்றனர்.'அவர்கள் களத்தில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டாலும், அவர்களுக்கு ஊதியம் முறையாக கிடைத்து விடும். மேலும், இதுபோன்ற மூன்றாம் நிலை நகரங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் போது, அவர்களுக்கு வேலையில் அதிக கவனம் ஏற்படும் என்றும், அவர்களின் அறிவை வளர்த்துக் கொள்ள உதவும்,' என்கின்றனர். அதிகாரிகள். இதனிடையே, இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும் அதிகாரிகளை கருப்புபட்டியலில் வைக்காதது ஏன் என்று அறப்போர் இயக்கத்தினர் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், 6 மாதங்களிலோ அல்லது மேலதிகாரிகள் மாறினால், ஓராண்டுக்குப் பிறகோ, மீண்டும் இந்தப் பணிக்கு வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.எனவே, குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட இடத்தில் அவர்கள் பணியிற்ற வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Yatin Durga
ஜன 31, 2025 12:27

இந்த 10 வது வார்டில் கவி என்கிற வரை அணுகினால் வேலையையும் கட்சிதமாக முதித்து கொடுத்து viduvar


balakrishnan n
ஜன 30, 2025 16:27

வாழ்க அறப்போர் இயக்கம்


அப்பாவி
ஜன 30, 2025 14:58

போங்க..


senthil kumar
ஜன 30, 2025 14:41

they will go and do the same corruption in third level locations. their mindset will not change. because of this people the local people is going to affect more as they don't money as like citi peopele to give what these officers are asking. who will change these corruptions I didn't know.


rama adhavan
ஜன 30, 2025 14:08

பணியில் இருந்து ஓய்வு பெறும் வரை சென்னைக்கு மாற்றல் கெடையாது என்ற நிபந்தனை விதிக்கலாம்.


Ramesh Sargam
ஜன 30, 2025 13:30

பிற மாவட்டங்களுக்கு மாற்றம் செய்யப்படுவதால், அவர்கள் என்ன திருந்திவிடப்போகிறார்களா? இல்லவே இல்லை. அங்கேயும் அவர்கள் முறைகேடுகளில் கட்டாயம் ஈடுபடுவார்கள். ஆக மாற்றம் ஒரு கண்துடைப்பு நாடகம். காதில் பூ சொருகும் வேலை.


Balajee
ஜன 30, 2025 12:44

அப்பப்பா பயங்கரமான தண்டனை


Shekar
ஜன 30, 2025 12:35

இந்த இடம் இனி ஜூனியர்களுக்கு, நீங்க இனி அடுத்த இடத்தை ரெடி பண்ணுங்க அப்படின்னு அவங்கள அனுப்பியிருக்காங்க. இவர்கள் சேவை விடியல் அரசுக்கு தேவை.


Bhaskaran
ஜன 30, 2025 12:07

இவங்க கோடி கோடியாக சம்பாதிச்சது போல் இவனுங்களுக்கு கீலே உள்ளவர்களுக்கும் வாய்ப்பு தரவேண்டும் என்னும் நல்ல எண்ணத்தில் செய்த செயல்


B N VISWANATHAN
ஜன 30, 2025 11:38

புதிய இடத்தில் மீண்டும் தவறு செய்தால் மறுபடியும் சென்னைக்கு இட மாறுதல் நடக்குமா. எப்போ தான் தண்டனை கிடைக்கும்


புதிய வீடியோ