போதைப்பொருளுடன் கைதான இருவருக்கு 11 நாட்கள் சிறை
சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில், 2 கிராம் மெத் ஆம்பெட்டமைனுடன், கடலுார் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த லிங்கநாதம்,29, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்த செந்தமிழன்,25, ஆகியோரை கடந்தாண்டு அக்.,5ல், போலீசார் கைது செய்தனர்.இவர்கள் தொடர்பான வழக்கு, சென்னை எழும்பூர், 14வது பெருநகர குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.தகுந்த சாட்சியங்களுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், லிங்கநாதம், செந்தமிழன் ஆகியோருக்கு, 11 நாட்கள் சிறை தண்டனையும், தலா, 10,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.