ஆவடியில் ஜனவரி - ஜூலை 1,174 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆவடி, ஆவடி கமிஷனரகத்தில், இந்தாண்டு இதுவரையிலும் 1,174 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆவடி போலீஸ் கமிஷனரகம் சார்பில், போதைப்பொருள் கடத்தலை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. கடந்தாண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 1103 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரையில் மட்டும் 271 கஞ்சா வழக்குகளில், 437 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 1,174 கிலோ கஞ்சா, 14.5 கிலோ கஞ்சா சாக்லேட் மற்றும் 9598 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புகையிலை பொருட்கள் தொடர்பான வழக்குகளில், 361 வழக்குகளில் 419 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 17,180 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.