உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அனுமதி இன்றி அமைக்கப்பட்ட 119 விளம்பர பலகைகள் அகற்றம்

அனுமதி இன்றி அமைக்கப்பட்ட 119 விளம்பர பலகைகள் அகற்றம்

சென்னை: சென்னையில் உரிய அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்ட, 269 விளம்பர பலகைகளில், 119 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை கண்டறிந்து, அவற்றை அகற்றுவதற்காக, உதவி செயற்பொறியாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், முதுநிலை வருவாய் அலுவலர், வரி மதிப்பீட்டாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் வார்டுகளில், சாலை வாரியாக ஆய்வு செய்து, விளம்பர பலகைகளின் விபரங்கள், மாநகராட்சி அதிகாரப்பூர்வ ஆவணங்களுடன் சரிபார்த்தனர். உரிய உரிமம் இல்லாதவை, நிராகரிக்கப்பட்டவை என, அனைத்து விபரங்களும் புவிக்குறியீடு வாயிலாக ஆய்வு செய்யப்பட்டன. அதன்படி, நேற்றைய நிலவரப்படி, 1,224 விளம்பர பலகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதும், அவற்றில் 296 அனுமதி இல்லாதவை என்பதும் கண்டறியப்பட்டது. இவற்றில், கடந்த 24ம் தேதி முதல் நேற்று வரை, அனுமதி இல்லாத 119 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள, அனுமதி இல்லாத விளம்பர பலகைகள் அகற்றும் பணி தொடரும் என, மாநகராட்சி கமிஷனர் சமீரன் தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை