மேலும் செய்திகள்
கஞ்சா கடத்தி விற்ற நால்வர் கைது
22-Dec-2024
கீழ்ப்பாக்கம்:சென்னையில், கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. அதில் கிடைத்த தகவலின்படி, கீழ்ப்பாக்கம் தனிப்படை போலீசார், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தவம், 45, என்பவரை கண்காணித்தனர்.அவர், ஆந்திரா மாநிலம் கூடூர் ரயில் நிலையத்திற்கு, நேற்று முன்தினம் இரவு கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கவே, அங்கு சென்று கண்காணித்தனர்.அப்போது தவம் சிக்கினார்; அவரிடம் இருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவரை நேற்று காலை, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
22-Dec-2024