மேலும் செய்திகள்
15 கிலோ கஞ்சா எழும்பூரில் பறிமுதல்
25-Sep-2025
சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில், 12 கிலோ கஞ்சாவை, ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று பறிமுதல் செய்தனர். ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குழுவினர், எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் வாராந்திர விரைவு ரயிலில், யாரும் உரிமை கோரப்படாத ஒரு பை இருந்தது. அந்த பையைத் திறந்து பார்த்த போது, ஆறு பண்டல்களில், மொத்தம் 12 கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு, 6 லட்சம் ரூபாய். இதையடுத்து, கஞ்சா பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரிடம், நேற்று ஒப்படைக்கப்பட்டது. கஞ்சாவை ரயில் பெட்டியில் விட்டு சென்றவர்கள் குறித்து, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறது என, ரயில்வே பாதுாப்பு இன்ஸ்பெக்டர் ஜெபாஸ்டியன் தெரிவித்துள்ளார்.
25-Sep-2025