130 போலீசார் ரத்த தானம்
சென்னை :சென்னை, புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில், நேற்று சென்னை காவல் துறை - ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையுடன் இணைந்து, சிறப்பு ரத்த தான முகாம் நடத்தின.முகாமில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த, 110 ஆண் போலீஸ்காரர்கள், 16 பெண் போலீஸ்காரர்கள் உட்பட, 130 பேர் ரத்த தானம் செய்தனர்.பல்வேறு பணிகளோடு பொதுமக்களின் உயிர்காக்கும் உற்ற தோழனாக செயல்பட்டு ரத் ததானம் வழங்கியது பெருமிதம் கொள்ள வைப்பதாக மருத்துவர்கள் பாராட்டினர்.இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ரத்த இருப்புகளை அதிகரிக்க செய்வதற்காக, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வேண்டுகோளின்படி, சென்னை காவல் துறை சார்பில் சிறப்பு ரத்த தான முகாம் நடத்தப்பட்டு வருகிறது. விடுமுறை காலங்களில் வழங்கப்படும் ரத்த தானம், உயிர்களை காப்பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது' என்றனர்.