ரூ.14.53 கோடியில் நலத்திட்ட உதவிகள்
ஆவடி, ஆவடி அடுத்த பாண்டேஸ்வரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. இதில், அமைச்சர் நாசர் பங்கேற்று, அரசு துறையின் திட்டங்கள் குறித்த கண்காட்சியை பார்வையிட்டார். தொடர்ந்து, 496 பயனாளிகளுக்கு, அரசு துறைகள் சார்பில், 14.53 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:பொதுமக்கள் திங்கள்தோறும் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் சென்று, குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று மனுக்கள் கொடுத்தனர். தற்போதுள்ள அரசு, அவர்கள் இடத்திற்கே சென்று மனுக்களை பெறுகிறது.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில், 350 பேருக்கு, 14.25 கோடியில் கிராம நத்தம் பட்டா, 31 பேருக்கு பட்டா மாற்றம், 18 பேருக்கு இணையவழி சான்றுகள் வழங்கப்பட்டன.மேலும், ஊரக வளர்ச்சித்துறையில் 22 பேருக்கு, 27.60 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், சிறுபான்மையினர் நலத்துறையில், 10 பேருக்கு 61,848 ரூபாய் செலவில் சலவை பெட்டி, தையல் இயந்திரம் என, 496 பேருக்கு 14.53 கோடி ரூபாயில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர், மாதவரம் எம்.எல்.ஏ., சுதர்சனம் ஆகியோர் உடனிருந்தனர்.