உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.8 கோடியில் புதுப்பித்த சாலையில் பத்து நாட்களில் 15 விபத்துகள்

ரூ.8 கோடியில் புதுப்பித்த சாலையில் பத்து நாட்களில் 15 விபத்துகள்

வேளச்சேரி; மாநகராட்சி சார்பில், 8 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்ப ட்ட வேளச்சேரி ரயில்வே சாலையில், அதிவேகத்தால் 10 நாட்களில், 15க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்ததால், முக்கிய சந்திப்புகளில் வேகத்தடை அமைக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேளச்சேரி ரயில்வே சாலை, 2.5 கி.மீ., நீளம், 80 அடி அகலம் கொண்டது. ரயில்வே பராமரிப்பில் இருந்த இந்த சாலை, சில மாதங்களுக்கு முன் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம், 8 கோடி ரூபாயில் இந்த சாலை புதுப்பிக்கப்பட்டது. இதனால், வாகனங்கள் முன்பை விட அதிவேகத்தில் செல்கின்றன. இதில், 2.5 கி.மீ., துாரத்திற்கு வேகத்தடை அமைக்கவில்லை. அதனால், பீக் ஹவர்ஸ் நேரங்களில், பள்ளி மற்றும் ஐ.டி., நிறுவனங்களின் வாகனங்கள் அதிகமாக செல்வதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ரயில் நிலைய சந்திப்பு, சேஷாத்ரிபுரம், பாலகிருஷ்ணாபுரம், வி.ஜி.பி., செல்வா நகர் ஆகிய பகுதிகள், இந்த சாலையுடன் இணைகின்றன. ரயில்வே சாலையில் அதிவேகமாக செல்வதால், உட்புற சாலைகளில் இருந்து செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். கடந்த பத்து நாட்களில், சிறியது, பெரியது என, 15க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. வேகத்தடை அமைத்து, முக்கிய சந்திப்புகளில் வாகனங்களின் வேகத்தை குறைக்காவிட்டால், விபத்துகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதை உணர்ந்து, முக்கிய சந்திப்புகளில் வேகத்தடை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை