150 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
தி.நகர், தி.நகரில் ரங்கநாதன் தெரு, அதன் அருகே உள்ள நடேசன் தெரு உள்ளிட்ட பகுதிகளில், நடைபாதை மற்றும் சாலை ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளன.அவ்வப்போது மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். எனினும், அதே இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைத்து விடுகின்றன.இந்நிலையில், தி.நகர் ரங்கநாதன் தெரு, நடேசன் தெரு, ரயில்வே பார்டர் சாலை, மற்றும் ராமேஸ்வர சாலை ஆகிய தெருக்களில் இருந்த 150க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை, மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர்.