அரசு அதிகாரி வீட்டில் 17 சவரன் நகை திருட்டு
வேளச்சேரி:வேளச்சேரி, வி.ஜி.பி., செல்வா நகரைச் சேர்ந்தவர் கவுசல்யா, 43; தலைமை செயலகத்தில் உயர்கல்வித் துறை பிரிவில் செக்சன் அதிகாரியாக உள்ளார்.இவர், தன் குழந்தையை கவனித்து கொள்ள, தனியார் ஏஜன்சி வாயிலாக, ஒரு பெண்ணை, ஜனவரி மாதம் வேலைக்கு அமர்த்தினர்.கணவரின் உடல்நிலையை காரணம் காட்டி, அப்பெண் வேலை விட்டு நின்றுவிட்டார். பின், மற்றொரு பெண்ணை வேலையில் சேர்த்தார். அவரும், அக்., மாதம் நின்றார். தற்போது, நளினி என்ற பெண் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில், சில நாட்களுக்கு முன், உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்ல, பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் இருந்த 17 சவரன் நகை மாயமாகி இருந்தது, கவுசல்யாவிற்கு தெரியவந்தது.இதையடுத்து அவர், ஏற்கனவே பணியில் இருந்த இருவர் மீது, வேளச்சேரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.