மேலும் செய்திகள்
புயல் மழையை சமாளிக்க ஆவடி மாநகராட்சி தயார்
28-Oct-2025
ஆவடி: ஆவடி மாநகராட்சியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இது குறித்து மாடு வளர்ப்போருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இது குறித்து நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து, நேற்று அதிகாலை, ஆவடி, பட்டாபிராம் மற்றும் தண்டுரை பகுதிகளில் சாலையில் சுற்றித்திரிந்த 18 மாடுகளை பிடித்து, காஞ்சிபுரத்தில் உள்ள கோ சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், 'மாடு வளர்ப்போர், அவற்றை முறையாக தொழுவத்தில் அடைத்து வளர்க்க வேண்டும். இந்தாண்டு இதுவரை 118 மாடுகள் பிடிக்கப்பட்டு, 1.45 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
28-Oct-2025