உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆட்டோ ஓட்டுநரை குத்திய 2 பேர் கைது

ஆட்டோ ஓட்டுநரை குத்திய 2 பேர் கைது

நீலாங்கரை, டிச. 3--நீலாங்கரை, குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த், 27; ஆட்டோ ஓட்டுநர். அக்., 30ம் தேதி நீலாங்கரை கடற்கரையில், இவரது சித்தப்பாவுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ரமணன், 35, முன்விரோதத்தை மனதில் வைத்து, பிரசாந்தை மறைமுகமாக திட்டினார்.இதில், இருவருக்கும், கைகலப்பு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரமணன் வீட்டுக்கு சென்று சகோதரர் ராஜேஷ், 32, என்பவரை அழைத்து சென்று, பிரசாந்தை கத்தியால் குத்தினார். வயிற்றில் பலத்த காயமடைந்த பிரசாந்த், அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நீலாங்கரை போலீசார், இரு தினங்களுக்கு முன் ராஜேஷை கைது செய்த நிலையில், ரமணனையும் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ