உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் கைது

மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் கைது

சென்னை, திருவல்லிக்கேணி, மாட்டாங்குப்பம், கெனால் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன், 35; கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் காலை, வாலாஜா சாலை வழியாக நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று சிறுவர்கள், அவரது கையில் வைத்திருந்த மொபைல் போனை பறித்து தப்பினர். திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த, 17 வயது சிறுவர்கள் இருவரையும் கைது செய்து, சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.இந்த சிறார்கள் ஏற்கனவே, ஓட்டேரியில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ