உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  அரக்கோணம் தடத்தில் 2 ரயில்கள் ரத்து

 அரக்கோணம் தடத்தில் 2 ரயில்கள் ரத்து

சென்னை: ரயில்வே பணிமனை மேம்பாட்டு பணி காரணமாக, சென்னை - அரக்கோணம் தடத்தில் இரண்டு மின்சார ரயில்கள் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. இது குறித்து, சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கை: பட்டாபிராம் ரயில்வே பணிமனையில், வரும் 13ம் தேதி வரை இரவு நேரங்களில் மேம்பாட்டு பணி நடக்க உள்ளது. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இ டிப்போ - ஆவடி இரவு 9:50 மணி ரயில் இன்று முதல் 13ம் தேதி வரை ரத்து செய்யப்படும். சென்ட்ரல் - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இரவு 10:40 மணி ரயில், இன்று முதல் 13ம் தேதி வரை ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விஜயவாடா 'வந்தே பாரத்'

ரயில்

நரசப்பூர் வரை நீட்டிப்பு

சென்னை சென்ட்ரல்- -- ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு 'வந்தே பாரத்' ரயில் சேவை, 2023ம் ஆண்டு செப்டம்பரில் துவங்கப்பட்டது. இந்த ரயிலை, நரசப்பூர் வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணியர் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று, வரும் 17ம் தேதி முதல் நரசப்பூருக்கு நீட்டித்து இயக்கப்பட உள்ளது. இந்த ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 5:30 மணிக்கு புறப்பட்டு முற்பகல் 11:45 மணிக்கு விஜயவாடா செல்லும். அங்கிருந்து பகல் 12:28 மணிக்கு கூடிவாடாவையும், மதியம் 1:15 மணிக்கு பீமாவரம் டவுனையும், மதியம் 2:10 மணிக்கு நரசப்பூரையும் சென்றடையும். மறுமார்க்கமாக, நரசப்பூரில் இருந்து பிற்பகல் 2:50 மணிக்கு புறப்பட்டு, இரவு 11:45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரயில், நேரம் மாற்றம் வரும் ஜன., 11ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ