உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பைக்கில் சென்ற 2 வாலிபர்கள் பலி; ஒருவரின் தலை துண்டான கோரம்

பைக்கில் சென்ற 2 வாலிபர்கள் பலி; ஒருவரின் தலை துண்டான கோரம்

சென்னை : சென்னை பள்ளிக்கரணையில் அதிகாலையில் நடந்த கோர விபத்தில், ஐ.டி., நிறுவன ஊழியர்களான இரு வாலிபர்கள் உயிரிழந்தனர். இதில், ஒருவரது தலை துண்டாகி விழுந்தது.கேரளாவைச் சேர்ந்தவர் விஷ்ணு, 24. சென்னை மேற்கு மாம்பலம், நாகலட்சுமி தெருவில் வசித்து வந்தார். இவரது நண்பர் கோகுல், 24; பம்மல், சங்கர் நகர் பிரதான சாலை, செல்வ விநாயகர் கோவில் தெருவில் வசித்தார். இருவரும் பெருங்குடியில் உள்ள தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்களுடன் பணியாற்றும் அஜேஷ், தன் வேலையை ராஜினாமா செய்து, சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு செல்கிறார்.இதனால், அவரை பார்ப்பதற்காக பள்ளிக்கரணை ராஜலட்சுமி நகரில் உள்ள அஜேஷ் அறைக்கு, நேற்று முன்தினம் இரவு விஷ்ணு, கோகுல் மற்றும் நண்பர்கள் நான்கு பேர் வந்து தங்கி, மது அருந்தியுள்ளனர்.மதுவின் போதை குறைந்தபோது, அதிகாலை 4:00 மணிக்கு விஷ்ணு, கோகுல் இருவரும், 300 சி.சி., திறன் உடைய கே.டி.எம்., பைக்கில் கள்ளச் சந்தையில் மது வாங்குவதற்காக, ரேடியல் சாலையில் உள்ள 'ஜோலி பே பார்' கடைக்கு சென்றுள்ளனர்; விஷ்ணு டூ - வீலரை ஓட்டியுள்ளார்.பின், தேவையான மது வகைகளை வாங்கி திரும்பிய போது, பள்ளிக்கரணை சிவன் கோவில் அருகே கட்டுப்பாட்டை இழந்த டூ - வீலர், சாலை மையத்தடுப்பில் மோதியது.இதில், பின்னால் அமர்ந்திருந்த கோகுல், 20 அடி துாரம் துாக்கி வீசப்பட்டு, மின் கம்பத்தில் மோதினார். அவரது தலை துண்டாகி தனியே விழுந்தது. விஷ்ணுவிற்கு நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார்.சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், இருவர் உடலையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Rajan
டிச 23, 2024 19:29

சோகம் இல்லை, இது வரம்பு மீறும் ஒவ்வொருவருக்கும் பாடம்


Perumal Pillai
டிச 23, 2024 11:36

The only take away from the accident is that liquor is available at someplaces round the clock. The owner of the outlet must be a big fish otherwise the shop will not be functioning freely without any hindrance. The name of the liquor outlet must be disclosed.


Muguntharajan
டிச 23, 2024 10:49

நண்பர்களுடன் மது போதையில் சாலையில் வாகன நெரிசலில் மற்ற வாகன ஓட்டிகளை பயமுறுத்தும் வகையில் முந்திக் கொண்டு 300 சிசி பைக்கில் பறப்பது சரியா? ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒரு நாள் நிச்சயமாக இந்த மாதிரி விபத்தில் சிக்கி கை கால்களையோ உயிரையோ இழப்பது நிச்சயம். இதை இந்த இளைஞர்கள் புரிந்து திருந்தினால் நல்லது. இல்லையென்றால் இப்படி அடிபட்டு சாக வேண்டியது தான். வேறு என்ன செய்வது? மது விற்பனையை தடை செய்தால் மட்டும் இது சரியாகாது. 300 சிசி ரேஸ் பைக் விற்பனையை தடை செய்ய வேண்டும். ஓவர் ஸ்பீட் கட்டுப் படுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக இளைஞர்கள் புரிந்து திருந்த வேண்டும். அப்போது தான் இந்த மாதிரி விபத்துகள் நடக்காது.


Chandra
டிச 23, 2024 10:12

பாவம் ஆட்சியாளர்கள் நன்றாக இருக்கட்டும் ..


angbu ganesh
டிச 23, 2024 10:00

அப்போ மதியம் 12 ல இருந்து இரவு 10 மணி வரைக்கும்தான் டாஸ்மாக் இயங்கணும்னு கட்டுபாடு இருக்கு ஆனா 24 மணி நேரமும் சரக்கு கிடைக்குது அதும் கள்ள சந்தைல அப்போ என்னாத்துக்கு இந்த நேர கட்டுபாடு 24 சரக்கு கடை ஓபன் பண்ண வேண்டியதுதானே இந்த ஒவ்வொரு மது சாவுக்கும் அரசெய் பொறுப்பேற்க வேண்டும்


Kanns
டிச 23, 2024 08:42

Aadiction& Overspeeding Solely Responsible for tgese Gruesome Deaths. What Area & Traffic-Camera Police are Doing???? Reduce Police& Install Smooth SpeedBreakers Plentily


Vijay
டிச 23, 2024 08:28

மதுவால் சீரழியும் இளைய சமூகம். சரி விடுங்க அந்த மது பாட்டில்களுக்கு என்ன ஆச்சு?


Raj
டிச 23, 2024 07:27

சாவை தானே தேடி வாங்கி கொண்டார்கள் மது என்ற போதை பழக்கத்தால் அதுவும் அதிகாலையில் அந்த அளவுக்கு போதைக்கு அடிமை அதுவும் 300 சி சி கொண்ட வண்டியில் விதி யாரை விட்டது. ஆன்மா சாந்தியடையுட்டும்.


சமீபத்திய செய்தி