வாசகர்கள் கருத்துகள் ( 1 )
போதைப் பொருள்கள் விற்றால் ஒரு 30 ஆண்டுகள் சிறை தண்டனை பரேல் இல்லாமல் கொடுக்க வேண்டும். கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். இவர்களுக்கு ஜாமினை கொடுக்கக் கூடாது.
வண்டலுார், வண்டலுார் ரயில் நிலையம் அருகே, நேற்று காலை கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு வாலிபர்கள், ரோந்து பணியில் இருந்த போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர்.அவர்களைத் துரத்தியபோது, கையில் வைத்திருந்த கஞ்சா பொட்டலத்தை கீழே போட்டுவிட்டு, ரயில் தண்டவாளத்தில் ஓடினர். அப்போது, இருவரும் தடுமாறி விழுந்ததில், போலீசாரிடம் சிக்கினர். அவர்கள் வீசியெறிந்த 2 கிலோ கஞ்சா பொட்டலங்களை மீட்டனர்.இருவரும், கடந்த ஆண்டு பிப்., 29ல் கொலை செய்யப்பட்ட தி.மு.க., பிரமுகர் ஆராமுதன் கொலை வழக்கில் தொடர்புடைய சம்பத்குமார், 23, மணிகண்டன், 19, என்பதும், சிறையில் இருந்து வெளியே வந்த பின், வண்டலுார் பகுதியில் தங்கி, கஞ்சா விற்பனை செய்ததும் தெரிந்தது.போலீசாரிடம் சிக்காமல் இருக்க ஓடி விழுந்ததில், மணிகண்டனுக்கு இடது கை முறிந்தது; சம்பத்குமாருக்கு வலது கால் முறிந்தது.இருவரையும், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு, இருவருக்கும் மாவுக் கட்டு போடப்பட்டது.இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.
போதைப் பொருள்கள் விற்றால் ஒரு 30 ஆண்டுகள் சிறை தண்டனை பரேல் இல்லாமல் கொடுக்க வேண்டும். கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். இவர்களுக்கு ஜாமினை கொடுக்கக் கூடாது.