உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 20 மின்சார விரைவு ரயில்களில்

20 மின்சார விரைவு ரயில்களில்

20 மின் விரைவு ரயில்களில்

இன்று முதல் 15 பெட்டிகள்

எழும்பூர் ரயில் நிலையத்தில், 735 கோடி ரூபாயில் நடக்கும் மேம்பாட்டு பணியின் ஒரு பகுதியாக, நடைமேடை 10, 11ல் பிரமாண்ட நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மின்சார ரயில்கள் ரத்தால், பயணியர் அவதிப்பட்ட நிலையில், சென்னை ரயில்வே கோட்டம் சார்பில், இலவச மாநகர பேருந்து இயக்கம், விரைவு பாதை வழியாக மின்சார விரைவு ரயில்கள் இயக்குவது போன்ற நடவடிக்கையால், பயணியருக்கு நேற்று ஆறுதலாக இருந்தது. மேலும், 165 மின்சார ரயில்களுக்கான திருத்தப் பட்ட அட்டவணை, அனைத்து ரயில் நிலையங் க ளிலும் நேற்று ஒட்டப்பட்டது. கடற்கரை - தாம்பரம் தடத்தில், நேற்று முதல் அலுவலக நேரங்களில், 12 பெட்டிகளுடன், 20 மின் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயில்கள் கிண்டி, மாம்பலம், எழும்பூர் மட்டுமே நின்று சென்றன. இதற்கிடையே, கூடுதல் பெட்டிகளுக்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில், மேற்கண்ட 20 விரைவு ரயில்களில், இன்று முதல் தலா 15 பெட்டி கள் இணைத்து இயக்கப்படும். மேலும், பயணியர் வருகை அதிகரித்தால், இலவச பயண பேருந்து களையும் கூடுதலாக இயக்குவோம் என, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை