மேலும் செய்திகள்
கண்ணகி நகரில் 90 பெண்களுக்கு ரத்தசோகை
20-Mar-2025
கண்ணகி நகர், ஓ.எம்.ஆர்., - பி.டி.சி., சந்திப்பு, பல்லவன் குடியிருப்பை சேர்ந்தவர் டில்லிபாபு, 33. ஐ.டி., ஊழியர்.இவர், வீட்டை பூட்டிவிட்டு, சாவியை ஷூவில் வைத்து செல்வது வழக்கம். இவரது மனைவி சொந்த ஊருக்கு சென்று, நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார்.கிண்டியில் பணிபுரியும் டில்லிபாபு, பணி முடித்து வீட்டுக்கு செல்லும்போது, ஓ.எம்.ஆரில் நின்ற மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றார்.வீட்டுக்கு சென்று ஷூவில் சாவியை தேடியபோது, அங்கு சாவி இல்லை. கதவு திறந்து இருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 20 சவரன் நகை திருடப்பட்டிருந்தது.இதுகுறித்த புகாரின்படி, கண்ணகி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
20-Mar-2025