உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிங்க்கிற்கு மாறுது 200 ரெட் பஸ்கள்

பிங்க்கிற்கு மாறுது 200 ரெட் பஸ்கள்

சென்னை, மாநகர போக்குவரத்து கழகத்தில், பெண்கள் இலவச பயணத்துக்கு, மேலும், 200 ரெட் பேருந்துகளையும், 'பிங்க் நிறத்துக்கு மாற்றப்பட உள்ளது.அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை, தமிழக அரசு, 2021 மே மாதம் அறிமுகம் செய்தது. சென்னையில் 1,559 சாதாரண கட்டண பேருந்துகளில், பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். மிகவும் பழமையான மாநகர பேருந்துகள் நீக்கப்பட்டு, புதிதாக வந்த, 240க்கும் மேற்பட்ட நீல நிற சொகுசு பேருந்துகளும், இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:மாநகர போக்குவரத்து கழகத்தில், சாதாரண பேருந்துகளில் கூண்டு சேதம் மற்றும் வயது முதிர்வு காரணமாக கழிவு செய்யப்பட்டு வருகிறது. எனவே, டீலக்ஸ் தடத்தில் இயக்கப்பட்டு வரும் பேருந்துகள், சாதாரண வழித்தடத்தில் பயன்படுத்தும் வகையில், 'பிங்க்' நிறத்திற்கு மாற்றி இயக்கப்படுகின்றன. புதிதாக கொள்முதல் செய்யப்பட்டுள்ள தாழ்தள சொகுசு பேருந்துகள் அனைத்துமே, டீலக்ஸ் தடத்தில் இயக்கப்படுவதால், அந்த தடத்துக்கு தேவையான சிவப்பு நிற பேருந்துகள் போக, மீதமுள்ள, 200 சிவப்பு நிற பேருந்துகளை, சாதாரண கட்டண பேருந்துகளாக இயக்க, 'பிங்க்' நிறம் பூசப்பட உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை