உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கும்மிடிப்பூண்டி தடத்தில் 21 மின்சார ரயில்கள் ரத்து

கும்மிடிப்பூண்டி தடத்தில் 21 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை, பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே, ரயில்பாதை மேம்பாட்டு பணி வரும், 27, 29ம் தேதிகளில் நடக்கிறது. இதனால், இந்த தடத்தில் செல்லும், 21 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; பல ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.* சென்ட்ரல் - சூலுார்பேட்டை காலை 5:40, காலை 10:15, நண்பகல் 12:10; சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி காலை 10:30, காலை 11:35 மணி ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன * சூலுார்பேட்டை - நெல்லுார் காலை 8:10; சூலுார்பேட்டை - சென்ட்ரல் பகல் 12:35, மதியம் 1:15, மாலை 3:10; நெல்லுார் - சூலுார்பேட்டை காலை 10:20 மணி ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன * ஆவடி - சென்ட்ரல் அதிகாலை 4:25; கும்மிடிப்பூண்டி - கடற்கரை மாலை 3:15; கும்மிடிப்பூண்டி - சென்ட்ரலுக்கு மாலை 3:45, மாலை 4:30 மணி ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன * கடற்கரை - கும்மிடிப்பூண்டி நண்பகல் 12:40, மதியம் 1:40, 2:40 மணி; கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் மதியம் 1:00, மதியம் 2:30 மணி ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன ஒரு பகுதி ரத்து * செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி காலை 9:55 மணி ரயில், கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும். கும்மிடிப்பூண்டி - தாம்பரம் மாலை 3:00 மணி ரயில், கடற்கரையில் இருந்து இயக்கப்படும்சிறப்பு ரயில்கள் * சென்ட்ரல் - பொன்னேரிக்கு காலை 10:30, மீஞ்சூருக்கு காலை 11:35, மதியம் 1:40, எண்ணுாருக்கு பகல் 12:40 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன* கடற்கரை - பொன்னேரிக்கு மதியம் 2:40; பொன்னேரி - கடற்கரைக்கு மதியம் 1:18, மாலை 4:45 மணி; மீஞ்சூர் - சென்ட்ரல் மதியம் 2:59, மாலை 4:16 மணி; எண்ணுார் - சென்ட்ரலுக்கு மாலை 3:56 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக, சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.ன***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை