உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவர்களுக்கு வரும் 22ல் பேச்சு போட்டி

மாணவர்களுக்கு வரும் 22ல் பேச்சு போட்டி

சென்னை,தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், சென்னை மாவட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான, காந்தி பிறந்த நாள் பேச்சுப் போட்டி, வரும், 22ம் தேதி காலை 9:00 மணிக்கு நடத்தப்பட உள்ளது.வடசென்னை மாணவர்களுக்கு, வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் கலைக்கல்லுாரி, மத்திய சென்னை மாணவர்களுக்கு, சேப்பாக்கம் மாநிலக்கல்லுாரி, தென் சென்னை மாணவர்களுக்கு ராணி மேரி கல்லுாரி ஆகிய இடங்களில், போட்டிகள் நடக்க உள்ளன.போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், அவர்களின் தலைமை ஆசிரியர், முதல்வரின் ஒப்புதலுடன் பங்கேற்க வேண்டும்.போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, முதல் பரிசாக, 5,000 ரூபாய், இரண்டாம் பரிசாக 3,000 ரூபாய், மூன்றாம் பரிசாக 2,000 ரூபாய் வழங்கப்படும்.அரசுப்பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்பு பரிசாக, தலா 2,000 ரூபாய் வழங்கப்படும். வெற்றி பெறும் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ