உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செஸ் போட்டி 240 மாணவர்கள் உற்சாகம்

செஸ் போட்டி 240 மாணவர்கள் உற்சாகம்

சென்னை:தமிழக பள்ளிக்கல்வித் துறையின், குடியரசு தின விளையாட்டு போட்டிகள் பல்வேறு இடங்களில் நடக்கின்றன.இதில் சென்னை வருவாய் மாவட்டத்தின் சதுரங்க போட்டி, ஜி.ஆர்.டி., பள்ளி சார்பில், அசோக் நகரில் உள்ள பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.ஏழு, 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட நான்கு பிரிவுகளில், இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும், ஆறு சுற்றுகள் வீதம் போட்டிகள் நடத்தப்பட்டன.போட்டியில், சென்னை வருவாய் மாவட்டத்திற்கு உட்பட 10 மண்டலங்களில் இருந்து, 240 மாணவ - மாணவியர் உற்சாகமாக பங்கேற்றனர்.ஒவ்வாரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தோர், திருப்பத்துார் மாவட்டத்தில் வரும் 28ம் தேதி நடக்க உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை