உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குப்பை அகற்ற கூடுதலாக 25 பேட்டரி வாகனங்கள்

குப்பை அகற்ற கூடுதலாக 25 பேட்டரி வாகனங்கள்

வளசரவாக்கம், வளசரவாக்கம் மண்டலத்தில் குப்பை சேகரிக்க கூடுதலாக 25 பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. வளசரவாக்கம் மண்டலத்தில் 143 முதல் 155 வரை 13 வார்டுகளில், 1.28 லட்சம் குடியிருப்புகள் உள்ளன. தினம் 270 டன் குப்பை உற்பத்தியாகிறது. இதில், 230 டன் குப்பை, பெருங்குடி குப்பை கிடங்கிற்கு எடுத்து செல்லப்படுகிறது. மீதமுள்ள 40 டன் குப்பை, பல வகையாக பிரித்து மறுசுழற்சி செய்யப்படுகிறது; உரம் தயாரிக்கப்படுகிறது. வளசவராக்கம் மண்டலத்தில், வீடு விடாக குப்பை சேகரிப்பது மற்றும் குப்பை அகற்றும் பணியை தனியார் நிறுவனமான, 'உர்பேசர் ஸ்மித்' மேற்கொண்டு வருகிறது. காலையில் 6:00 மணி முதல் 2:00 மணி வரை குப்பை அகற்ற 216 பேட்டரி வாகனங்களும், மதியம் 2:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை 26 பேட்டரி வாகனங்களும், இரவு பணியில் 22 பேட்டரி வாகனங்களும் பயன்பட்டில் உள்ளன. காலை ஷிப்டில் பயன்படுத்தப்படும் 216 பேட்டரி வாகனங்கள் போதுமானதாக இல்லை. அதனால், வீடு வீடாக சென்று குப்பை அகற்றுவதில் தொய்வு உள்ளதாகவும், பேட்டரி வாகனங்களை அதிகரித்து இயக்க வேண்டும் எனவும், வளசரவாக்கம் மண்டல கவுன்சிலர்கள், மண்டல கூட்டத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். இதையடுத்து, காலை ஷிப்டில் புதிதாக 25 பேட்டரி வாகனங்கள் சேர்க்கப்பட்டு, நேற்று முதல் 241 பேட்டரி வாகனங்கள் குப்பை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி