உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 262 படுக்கை வசதியுடன் பெரும்பாக்கத்தில் மருத்துவமனை

262 படுக்கை வசதியுடன் பெரும்பாக்கத்தில் மருத்துவமனை

சென்னை:பெரும்பாக்கம் கல்லுாரி சாலையில், 2.16 லட்சம் சதுர அடி இடம், அரசு மருத்துவமனை கட்ட ஒதுக்கப்பட்டதுஇதில், 1 லட்சம் சதுர அடி பரப்பில், 51 கோடி ரூபாயில், ஆறு மாடிகளுடன் மருத்துவமனை கட்டப்படுகிறது. ஒவ்வொரு மாடியும், 16,714 சதுர அடி பரப்பில் அமைகிறது. அறுவை சிகிச்சை, அவசர பிரிவு, பொது பிரிவு, டயாலிசிஸ் உள்ளிட்ட பிரிவுகளில், 262 படுக்கை வசதி அமைய உள்ளது. ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன், மருந்து சேமிப்பு அறை, அலுவலகம், ஆவண காப்பகம் உள்ளிட்ட வசதிகளுடன் அமைகிறது. வளாகத்தில், வாகன பாதுகாப்பு இடம், ஜெனரேட்டர் அறை, சுற்றுச்சுவர், இரண்டு நுழைவாயில் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.கடந்த ஆண்டு, மார்ச் மாதம் பணி துவங்கியது. ஆறு மாதத்தில், அனைத்து பணிகளையும் முடிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ