வாசகர்கள் கருத்துகள் ( 1 )
27cm rain was not in just one hour. It was in 3-hours.
சென்னை:மேக வெடிப்பு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு விடாது மழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக மணலியில் ஒரு மணி நேரத்தில், 27 செ.மீ., மழை கொட்டியது. பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை போன்ற சமவெளி பகுதிகளில், மேக வெடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுவது அரிதான நிகழ்வு என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு பருவமழை இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எதிர்பாராத விதமாக நேற்று முன்தினம் இரவு அதிக கனமழை கொட்டித்தீர்த்தது.
வளிமண்டலத்தில் காற்றின் வேக மாறுபாடு, காற்று சுழற்சி, காற்று குவிதல் காரணமாக மேக வெடிப்பு ஏற்படுகிறது. நேற்று முன்தினம், திருவள்ளூர் பகுதியில் ஏற்பட்ட மழை மேகங்கள், காற்று சுழற்சியால் சென்னை நோக்கி இரவில் நகர்ந்தன. இதனால், நேற்று முன்தினம் இரவு, மணலி உள்ளிட்ட பகுதிகளில், 10:00 மணி முதல், 11:00 மணி வரையிலான சமயத்தில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இதுகுறித்து, துல்லியமாக எதையும் அறிவிக்க முடியாத நிலை உள்ளது. - ஆர்.ஹேமசந்தர், தன்னார்வ வானிலை ஆய்வாளர்
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க, ஜெர்மனி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரனை, தொலைபேசியில் நேற்று தொடர்பு கொண்டார். சென்னையில் மழை நிலவரம் மற்றும் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். அப்போது, 'கனமழையால் மாநகரில் பெரிதாக பாதிப்புகள் இல்லை' என, முதல்வரிடம், குமரகுருபரன் தெரிவித்துள்ளார். 'எத்தகைய மழைச்சூழலையும் எதிர்கொள்ளும் அளவில் தயாராக இருக்கவும், மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணியாற்றவும், முதல்வர் அறிவுறுத்தினார்' என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீரை சேமிக்கும் திட்டத்தை, 20 கோடி ரூபாய் செலவில், மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. முதற்கட்டமாக மாதிரி பள்ளி விளையாட்டு மைதானம், ராஜா அண்ணாமலைபுரம் செயின்ட் மேரி சாலை, இந்திரா குடியிருப்பு, நடேசன், பால்மோர், கிரசென்ட் சாலை, ராமநாதன் சாலை ஆகிய எட்டு விளையாட்டு மைதானங்களில், தலா 5 லட்சம் லிட்டர் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், 770 பூங்காக்களில், தலா 300 லிட்டர் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக மழை பெய்தால், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூங்காக்களில் மழைநீர் தேங்கும். ஆனால் இம்முறை, ஜெர்மன் தொழில்நுட்பம் காரணமாக, இந்த இடங்களில் தண்ணீர் தேங்காமல், அங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டமைப்பு வழியாக நிலத்தடி நீர் சேமிக்கப்பட்டதாக, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் மின் விநியோகம் பாதிப்பு பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், புழல் அண்ணா நகர் பகுதியில், 30 அடி நீள பழைய சுற்றுச்சுவர், திடீரென இடிந்து விழுந்தது. இதில், மின்கம்பம் சாய்ந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மின் விநியோகம் தடைபட்டது. இதனால், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரச பேச்சு நடத்தியபின், அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். நேற்று மதியத்திற்கு மேல் மின் விநியோகம் சீரானது. மூழ்கிய தனியார் நிறுவனம் திருவேற்காடில் பெய்த கனமழையால், நுாம்பல் பிரதான சாலையில் இயங்கி வரும், 'ஸ்ரீ குமார் டெக்ஸ் இண்ட் கார்ப்பரேசன்' எனும் தனியார் ஆடை ஏற்றுமற்றி நிறுவனத்தை சுற்றி முழங்காலுக்கு மேல் வெள்ளம் தேங்கி நிற்கிறது. நேற்று விடுமுறை என்பதால் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. பாலம் மூழ்கியது கூவம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நொளம்பூரில் உள்ள தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின. இதனால், அவ்வழியே செல்ல போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆறு நாட்களுக்கு முன் பெய்த மழையிலும், இந்த தரைப்பாலம், வெள்ளப்பெருக்கால் மூழ்கியது.27 விமான சேவைகள் பாதிப்பு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு 11:00 மணி முதல் நேற்று அதிகாலை வரை பெய்த கன மழையால், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த விமானங்கள், நீண்ட நேரம் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தன. ஹைதராபாதில் இருந்து, 14-0 பயணியருடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணியர் விமானம்; பிராங்போர்ட்டில் இருந்து, 268 பயணியருடன் சென்னை வந்த லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணியர் விமானம் உட்பட, நான்கு விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களுரூ விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டன. கோலாலம்பூர், ஹாங்காங், திருவனந்தபுரம், இந்துார் உட்பட பல்வேறு விமான நிலையங்களில் இருந்து சென்னை வந்த, 8 விமானங்கள் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரம் வானில் வட்டம் அடித்து, பின் தாமதமாக தரை இறங்கின. அதேபோல், சென்னையில் இருந்து, இலங்கை, துபாய், குவைத், மஸ்கட், சிங்கப்பூர், புனே உட்பட, 15 விமான நிலையங்களுக்கு புறப்படவிருந்த விமானங்கள், மழை காரணமாக தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால், பயணியர் கடும் அவதியடைந்தனர். சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களூரு திருப்பி அனுப்பப்பட்ட நான்கு விமானங்கள், நேற்று அதிகாலை ஒன்றன் பின் ஒன்றாக, பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்தடைந்தன. சென்னை சர்வதேச விமான நிலையத்தில், வருகை மற்றும் புறப்பாடு என, 27 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால், பயணியர் கடும் அவதியடைந்தனர்.
27cm rain was not in just one hour. It was in 3-hours.