உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 27 விமான சேவைகள் பாதிப்பு

27 விமான சேவைகள் பாதிப்பு

சென்னை:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு 11:00 மணி முதல் நேற்று அதிகாலை வரை பெய்த கன மழையால், சென்னை சர்வதேச விமான நிலையத்தில், வருகை மற்றும் புறப்பாடு என, 27 விமான சேவைகள் பாதிக்கப் பட்டன: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு 11:00 மணி முதல் நேற்று அதிகாலை வரை பெய்த கன மழையால், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த விமானங்கள், நீண்ட நேரம் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தன. ஹைதராபாதில் இருந்து, 14-0 பயணியருடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணியர் விமானம்; பிராங்போர்ட்டில் இருந்து, 268 பயணியருடன் சென்னை வந்த லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணியர் விமானம் உட்பட, நான்கு விமானங்கள் சென்னையில் தரயிறங்க முடியாமல், பெங்களுரூரு விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டன. கோலாம்பூர், ஹாங்காங், திருவனந்தபுரம், இந்துார் உட்பட பல்வேறு விமான நிலையங்களில் இருந்து சென்னை வந்த, 8 விமானங்கள் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரம் வானில் வட்டம் அடித்து, பின் தாமதமாக தரை இறங்கின. அதேபோல், சென்னையில் இருந்து, இலங்கை, துபாய், குவைத், மஸ்கட், சிங்கப்பூர், புனே உட்பட, 15 விமான நிலையங்களுக்கு புறப்படவிருந்த விமானங்கள், மழை காரணமாக தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால், பயணியர் கடும் அவதியடைந்தனர். சென்னையில் தரை இறங்க முடியாமல், பெங்களூரு திருப்பி அனுப்பப்பட்ட நான்கு விமானங்கள், நேற்று அதிகாலை ஒன்றன் பின் ஒன்றாக, பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்தடைந்தன. சென்னை சர்வதேச விமான நிலையத்தில், வருகை மற்றும் புறப்பாடு என, 27 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால், பயணியர் கடும் அவதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை