உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோயம்பேடு கடை கண்காணிக்க 28 அதிகாரிகள்

கோயம்பேடு கடை கண்காணிக்க 28 அதிகாரிகள்

சென்னை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., சார்பில், கோயம்பேடில் காய், கனி, பூ, மளிகை பொருட்களுக்கான மொத்த விற்பனை அங்காடி வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதை நிர்வகிக்க அங்காடி நிர்வாக குழு உள்ளது. இதற்கு தலைமை நிர்வாக அலுவலராக, டி.ஆர்.ஓ., இந்துமதி, அயல்பணி முறையில், அங்காடி வளாக நிர்வாக பணியில் உள்ளார். இந்நிலையில், கோயம்பேடு அங்காடி வளாகத்தில், அடிப்படை வசதிகள் பராமரிப்பு பணிகள் முறையாக நடப்பதில்லை என்று புகார்கள் வந்தன. இதனால், சீப் பிளானர், சீனியர் பிளானர், துணை திட்ட அலுவலர் நிலையில், 28 பேருக்கு, அங்காடி வளாக பணிகளை கண்காணிக்கும் பணியை ஒதுக்கி, சி.எம்.டி.ஏ., உத்தரவிட்டுள்ளது.கட்டுமான துறையினர் கூறுகையில், 'சி.எம்.டி.ஏ.,வில் கட்டுமான திட்ட அனுமதி வழங்கல் உள்ளிட்ட பணிகளை கவனிக்க வேண்டிய திட்ட அலுவலர்களை, அங்காடி வளாக பராமரிப்பு கண்காணிப்பு பணியில், மேலதிகாரிகள் ஈடுபடுத்தி உள்ளனர். 'இத்தகைய அணுகுமுறையால், கட்டுமான திட்ட அனுமதி தொடர்பான பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புஉள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை