திருவான்மியூர் பஸ் நிலையத்தில் 29 கிலோ கஞ்சா பறிமுதல்
திருவான்மியூர், திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகில், வாலிபர் ஒருவர் கஞ்சா மறைத்து வைத்து விற்பனை செய்வதாக, அடையாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் அங்கு சென்றபோது, இரண்டு பெண்கள் உள்ளிட்ட நான்கு பேர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது, புதுச்சேரியைச் சேர்ந்த ஹரிஷ், 23, ஹைதராபாதைச் சேர்ந்த முருகேசன், 55, பீட்டர் 36, பூஜா, 23, என தெரிந்தது.சென்னையில் வாடகை வீட்டில் தங்கி உள்ள இவர்கள், வட மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, சென்னையில் பல்வேறு பகுதியில் விற்பனை செய்து வந்தனர்.நான்கு பேரையும் கைது செய்த போலீசார், இவர்கள் வீட்டில் இருந்து 29 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.