பெரம்பூரில் 3 பைக் தீக்கிரை
பெரம்பூர், பெரம்பூர், மங்களபுரத்தைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன், 51, பிரசாத், 40, மற்றும் ஆனந்த், 41. இவர்கள் வேலைக்கு சென்று விட்டு தங்களின் ேஹாண்டா ரக பைக் இரண்டு மற்றும் ஜூபிட்டர் ஸ்கூட்டர் ஆகியவற்றை வீட்டருகே நிறுத்தி, துாங்கச் சென்று விட்டனர்.நள்ளிரவு திடீரென மூன்று வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வியாசர்பாடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். அதற்குள் வாகனங்கள் எலும்புக் கூடானது. விசாரணையில், பெட்ரோல் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.