உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடத்தப்பட்டதாக கருதப்பட்ட 3 பிள்ளைகள் பீஹாருக்கு பயணம்

கடத்தப்பட்டதாக கருதப்பட்ட 3 பிள்ளைகள் பீஹாருக்கு பயணம்

செம்மஞ்சேரி, சோழிங்கநல்லுாரில், நேற்று முன்தினம் கடத்தப்பட்டதாக கருதப்பட்ட நிலையில், மூன்று பிள்ளைகளும் பீஹாரில் உள்ள உறவினர் வீடுகளுக்கு, புறப்பட்டது தெரியவந்தது. பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் இந்துதேவி, 35. இவருக்கு 15, 11 வயதில் இரு மகள்களும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்துதேவி வீட்டு வேலை செய்கிறார். நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பும்போது, வீட்டில் இருந்த மூன்று குழந்தைகளையும் காணவில்லை. இது குறித்து, செம்மஞ்சேரி போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, மூன்று குழந்தைகளையும் தேடினர். இந்நிலையில், மூன்று குழந்தைகளும் பீஹார் மாநிலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு, ரயிலில் சென்று கொண்டிருப்பது தெரிந்தது. இது குறித்து போலீசார் கூறியதாவது: கணவரை இழந்த இந்து தேவி, வேறு ஒருவருடன் குடும்பம் நடத்துவது பிள்ளைகளுக்கும் பிடிக்கவில்லை. இதனால், மூன்று பேரும் உறவினர்களின் வழிகாட்டுதல்படி, ரயில் மூலம் பீஹார் மாநிலம் நோக்கி செல்கின்றனர். இன்று காலை, ரயில் பீஹார் சென்றடையும். மூன்று குழந்தைகளும், உறவினர்களிடம் சேரும் வரை கண்காணித்து வருகிறோம். இவ்வாறு போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை