உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடிநீர் வினியோகம் 3 நாள் கட்

குடிநீர் வினியோகம் 3 நாள் கட்

சென்னை, : சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக, மந்தைவெளி, ராமகிருஷ்ணமடம் சாலையில் பிரதான குடிநீர் குழாய் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதனால், 24ம் தேதி காலை 9:00 மணி முதல் 26ம் தேதி அதிகாலை 4:00 மணி வரை, எம்.ஆர்.சி.,நகர் குடிநீர் பகிர்மான நிலையம் செயல்படாது. இதன் காரணமாக, தேனாம்பேட்டை மண்டலம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மைலாப்பூர், நந்தனம், அபிராமபுரம், மந்தைவெளி மற்றும் அடையாறு மண்டலம், ராஜா அண்ணாமலைபுரம் பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும். அவசர தேவைகளுக்கு, https://cmwssb.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து குடிநீர் பெற்றுக்கொள்ளலாம். இணைப்பு இல்லாத மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு, லாரி குடிநீர் வழங்கப்படும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை